பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்; கதறி, கதறி அழுத மாணவிகள்

பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்; கதறி, கதறி அழுத மாணவிகள்

2 mins read
b0063c3f-f428-4088-a695-e598bbf77d96
ஆசிரியரை சூழ்ந்துகொண்டு 'வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டாம். இந்தப் பள்ளியிலேயே இருங்கள்' என்று கூறி கதறி அழுத மாணவிகள். படம்: இந்திய ஊடகம் -

வேலூர்: ஐந்து ஆசி­ரி­யர்­கள் வேலை இட­மாற்­றம் செய்­யப்­பட்­ட­தால் அவர்­க­ளைப் பிரிய முடி­யாத மாண­வி­கள் கதறி அழு­த ­காட்சி மனதை உருக்­கு­வ­தாக இருந்­தது.

வேலூர் மாவட்­டம் கே.வி.குப்­பத்­தில் அரசு பெண்­கள் மேல் நிலைப்­பள்ளி செயல்­பட்டு வரு­கிறது. இங்கு ஒன்­பது, 10ஆம் வகுப்பு மாண­வி­க­ளுக்கு புனிதா, கார்த்­தி­கே­யன், ஜெயந்தி, தன­லஷ்மி, சுகந்தி ஆகிய ஐந்து ஆசிரி யர்­கள் பாடம் நடத்தி வந்­த­னர்.

இவர்­களில் புனி­தா­வும் கார்த்­தி­கே­ய­னும் 14 ஆண்­டு­க­ளுக்கு மேலா­க­வும் மற்­ற­வர்­கள் பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலா­க­வும் அங்கு பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்.

இவர்­கள் சிறப்­பாக பாடங்­களை நடத்­தி­ய­தால் மாண­வி­கள் ஆர்­வத்­து­டன் பள்­ளிக்கு வந்து கற்­றுக் கொண்­ட­னர்.

இந்த நிலை­யில் மாணவி களுக்கு அதிர்ச்சி ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஐந்து ஆசி­ரி­யர்­களும் இட­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தாக பள்­ளிக்­கல்­வித் துறை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உத்­த­ரவு அனுப்­பி­யது.

ஆசி­ரி­யர் கார்த்­தி­கே­யன் பெண்­ணாத்­தூர் பெண்­கள் மேல் நிலைப் பள்­ளிக்­கும் ஆசி­ரியை தன­லட்­சுமி வேலப்­பாடி மேல்­நி­லைப் பள்­ளிக்­கும் ஆசி­ரியை புனிதா காங்­கே­ய­நல்­லூர் ஆண்­கள் மேல்­நி­லைப் பள்­ளிக்­கும் ஜெயந்தி என்ற ஆசி­ரி­யர் லத்­தேரி பெண்­கள் மேல் நிலைப் பள்­ளிக்­கும் சுகந்தி என்ற ஆசி­ரி­யர் ஆற்­காடு தோப்­புக்­காடு உயர்­நி­லைப் பள்­ளிக்­கும் மாற்­றப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து மறு­நாள் புதன்­கி­ழமை நண்­ப­கலில் பணி­மா­று­தல் பெற்ற ஐந்து ஆசி­ரி­யர்­களும் கடை­சி­யா­கப் பாடம் நடத்­தி­மு­டித்­த­னர். பின்­னர் பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் அறை­யில் இருந்து வெளியே வந்த அவர்­களை மாண­வி­கள் சுற்றி வளைத்து, கட்­டிப்­பி­டித்து அழு­த­னர்.

"வேறு பள்­ளிக்கு செல்ல வேண்­டாம், இந்த பள்­ளி­யிலே இருங்­கள்," என்று மாண­வி­கள் சொல்லி, சொல்லிக் கதறி அழு­த­னர். அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்­திய ஆசி­ரி­யர்­கள் நன்­றாக படிக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னர்.

ஆசி­ரி­யர்­கள் அங்­கி­ருந்து விடை பெறும் வரை மாண­வி­கள் தொடர்ந்து அழு­து கொண்­டி­ருந்­த­னர்.

கடந்த 2019ஆம் ஆண்­டி­லும் திரு­வள்­ளூர் மாவட்­டம் வெளி­ய­க­ரம் அரசு உயர்­நி­லைப்­பள்­ளி­யில் ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய ஆசி­ரி­யர் பக­வான் பணி­மா­று­தல் செய்­யப்­பட்­டார். இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவர்கள் ஆசிரியரை அங்கிருந்து வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்திய காட்சி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.