செல்ல நாய்க்கு வளைகாப்பு

செல்ல நாய்க்கு வளைகாப்பு

1 mins read
ad37d8db-263f-4c69-99d2-c93ef323ddf1
செல்லமாக வளர்க்கப்படும் நாயின் காலில் வளையல் மாட்டி வளைகாப்பு நடத்தப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

சேலம்: சேலம் மாவட்­டத்­தில் வளர்ப்பு நாய்க்கு வளை­காப்பு நடத்தி உற­வி­னர்­க­ளுக்கு விருந்து வைத்த காணொளி சமூக ஊட­கங்­களில் அதி­வே­கத்­தில் பகி­ரப்பட்டு வரு­கிறது.

மேட்­டூரை அடுத்­துள்ள மேச்­சேரி இந்­திரா நக­ரைச் சேர்ந்த புகைப்­­ப­டக் கலை­ஞ­ரான நட­ரா­ஜன், கடந்த 20 மாதங்­க­ளாக 'ஹைடி' என்ற ஆண் பொமே­ரி­யன் நாயை வளர்த்து வரு­கி­றார்.

இந்த நிலை­யில் இதற்கு ஜோடி­யாக ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்பு 'சாரா' என்ற மற்­றொரு பெண் பொமே­ரி­யன் நாயை வாங்கி வளர்த்து வந்­தார்.

இதை­ய­டுத்து தற்­பொ­ழுது 'சாரா' கர்ப்­பம் தரித்­துள்ள நிலை­யில், பெண்­க­ளுக்கு நடத்­தப்­ப­டு­வதை போலவே வளை­காப்பு நடத்த வேண்­டு­மென மகள்­கள் ஹேமா, ஹரிணி ஆகி­யோர் விரும்­பி­னர்.

இதற்கு அவர்­கள் பெற்­றோ­ரும் சம்­ம­தித்­த­தால் கடந்த 13ஆம் தேதி வளை­காப்பு அவ­ரது இல்­லத்­தில் தட­பு­ட­லாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இரு நாய்­களையும் தனித்­த­னி­யாக இரு நாற்­கா­லி­களில் அமர வைத்து மஞ்­சள், குங்­கு­மம் இட்டு அதன் காலில் வளை­யல் மாற்­றப்­பட்­டது. பின்­னர் விழா­வுக்கு வந்­த­வர்­க­ளுக்கு அறு­சுவை உணவு பரி­மா­றப்­பட்­டது.

சார­விற்கு வளை­யல் மாட்­டிய சுமார் 30 பெண்­க­ளுக்கு வெற்­றிலை பாக்கு, தட்டு, கண்­ணாடி, சீப்பு, தாலிக் கயிறு, மஞ்­சள், குங்­கு­மம் ஆகி­யவை சீர்­வ­ரி­சை­யாக வழங்­கப்­பட்­டன. இந்த வளை­காப்பு நிகழ்ச்சி காணொ­ளி­யாக எடுக்­கப்­பட்டு சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­பட்டதால் அது தீயா­கப் பரவி வரு­கிறது.