விஜயகாந்த்: விபத்தில்லாத தமிழகத்துக்கு வலியுறுத்து

விஜயகாந்த்: விபத்தில்லாத தமிழகத்துக்கு வலியுறுத்து

1 mins read
80c3503d-60a5-4bf6-9eae-fdbc49e2d875
-

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இத்தகவலைக் கேட்கவே வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், சாலை விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வெளிநாடுகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலைகளை உருவாக்கிட வேண்டும். நெடுஞ்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ள இடங்களில் சமிக்ஞை விளக்குகள், வேகத்தடைகள், கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.