தமிழகத்தில் வெளிநாட்டு மருத்துவத் ெதாழில்நுட்பம்

தமிழகத்தில் வெளிநாட்டு மருத்துவத் ெதாழில்நுட்பம்

2 mins read
0694ca1d-94d2-44fb-a044-d197ccf8f802
வெளி­நா­டு­களில் பணி­யாற்­றும் தமிழ் பேசும் பிர­பல மருத்­துவ நிபு­ணர்­கள் சென்னையில் நடைபெற்ற விழா­வில் கலந்துகொண்டு, அறுவை சிகிச்சையின்போது எந்த அளவுக்கு அதிநவீன சாதனங்கள் உதவிகரமாக இருக்கும் என்பதை அமைச்சரிடம் விளக்கிக் கூறினர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: வெளி­நா­டு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் அதி நவீன மருத்­து­வக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் தமிழ்­நாட்­டிற்குக் கொண்டு வரும்­ முயற்சியில் சென்னை ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யில் உள்ள 'பிரிட்­டிஷ் கவுன்­சில்' களமிறங்கி உள்ளது.

சென்­னை­யில் நடை­பெற்ற விழாவில் வயிறு, குடல் சார்ந்த பல்­வேறு பிரச்­சி­னை­களையும் மிகத் துல்­லி­ய­மா­கக் கண்­டறி­யும் ரோபோ இயந்­தி­ரத்தை மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அறி­மு­கப்படுத்தினார்.

இந்த அதி­ந­வீன சாத­னம் தமி­ழ­கத்­தில் உள்ள மருத்துவமனைகளில் பயன்­ப­டுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியபோது, "பல்­வேறு நாடு­க­ளையும் சேர்ந்த 15,000 பேருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மருத்­துவ அறுவை சிகிச்­சை­யின்­போது இந்த அதி­ந­வீன சாத­னம் பயன்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

"கர்ப்­பப்பை நீக்க அறுவை சிகிச்சை உள்­ளிட்ட பல்­வேறு அறுவை சிகிச்­சை­களுக்கும் இந்த மருத்­துவச் சாத­னத்தைப் பயன்­படுத்த முடி­யும். இதன்­மூ­லம் தமி­ழ­கத்தைச் சேர்ந்த ஏரா­ள­மான பெண்கள் பயன்பெற முடியும். மருத்­து­வத்­து­றை­யில் புதிய தொழில்­நுட்­பத்தை அமல்­ப­டுத்­து­வ­தில் தமி­ழ­கம் எப்­போ­தும் முன்­மா­தி­ரி­யாக இருக்­கும்," என்­றார்.

அமெ­ரிக்கா, லண்­டன், மத்­திய கிழக்கு நாடு­கள் உள்­ளிட்ட உல­கின் பல பகு­தி­களிலும் பணி­யாற்­றும் தமிழ் பேசும் மருத்­து­வர்களை ஒன்­றி­ணைத்து வெளி­நா­டு­களில் மருத்­து­வம், மருத்­து­வத் தொழில்­நுட்­பத்தின் கீழ் பயன்­ப­டுத்­தப்­படும் அதி­ந­வீன மருத்­துவ முறை­களைக் கொண்டுவரு­வ­தற்­காக 'தமி­ழ­கத்­துக்கு முதல் முன்­னு­ரிமை' என்ற அமைப்பு ஏற்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த அடிப்­ப­டை­யில் மலே­சியா, கரீபி­யன் தீவு போன்ற பகு­தி­களில் 'லேப்­ராஸ்­கோப்­பி' அறுவை சிகிச்­சை­யின்­போது உத­வி­யா­ளர் இல்­லா­மல் இயக்­கப்­படும் அதி­ந­வீன கேம­ராவை தமி­ழ­கத்­தில் அறி­முகப் ­ப­டுத்த இவ்வமைப்பு முயற்சி மேற்­கொண்­டது. இந்தக் கருவியை மருத்துவர்கள் தங்­க­ளது நெற்­றி­யில் பொருத்­திக்­கொண்டு உத­வி­யா­ளர் யாருமின்றி அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக செய்ய முடி­யும் எனக் கூறப்படுகிறது.