மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்பட 10 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளையரான கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ெகாடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
"சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ பதிவுகள் இல்லை. எனவே கீழமை நீதிமன்றம் அளித்துள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகிறோம்," என மனுவில் கூறியுள்ளனர்.

