அதிரடி சோதனையில் 105 பேர் பிடிபட்டனர்

அதிரடி சோதனையில் 105 பேர் பிடிபட்டனர்

1 mins read
03688f9f-b817-40ca-ade8-666e4476faa0
-

சென்னை: தலைநகர் சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போைதப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, இதனைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆங்காங்கே அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி இரவு வரை 105 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.