போதைக் கும்பல் தலைவி உள்பட 6 பட்டதாரி இளையர்கள் கைது

போதைக் கும்பல் தலைவி உள்பட 6 பட்டதாரி இளையர்கள் கைது

2 mins read
c7808cc5-d1df-41cf-a5a5-288c0c10187c
ராஜ­லட்­சு­மி. படம்: ஊடகம் -

சென்னை: கல்­லூரி மாண­வர்­களுக்குப் போதை மாத்­தி­ரை­களை விற்று, அதன் மூலம் பணம் சம்­பா­தித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 22 வயது இளம்­பெண் உள்­ளிட்ட ஆறு பட்­ட­தாரி மாண­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இக்­கும்­ப­லி­டம் இருந்து 7,125 போதை, கருக்­க­லைப்பு மாத்திரை களும் இரு மடிக்­க­ணி­னி­கள், 9 கைபேசிகள், ரூ.441,300 ரொக்­கம், மூன்று இரு­சக்­கர வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

திரு­வள்­ளூர் மாவட்­டம், பூந்­த­மல்­லி­யைச் சேர்ந்த ராஜ­லட்­சு­மி­யின் தலை­மை­யின் கீழ் செயல்­பட்டு வந்­துள்ள இந்­தக் குழு­வி­னர், ஆந்­திரா, புது­டெல்லி உள்­ளிட்ட வெளி­மா­நி­லங்­களில் இருந்து போதை, கருக்­கலைப்பு மாத்­தி­ரை­க­ளைக் 'கூரி­யர்' மூலம் பெற்று சென்னை உள்­பட மாநிலம் முழு­வ­தும் விற்­பனை செய்து வந்தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இவர்கள் ஆறு பேரும் பட்­ட­தா­ரி­கள் என்­ப­தும் தங்­க­ளு­டன் கல்­லூ­ரி­களில் படித்த சக மாண­வர்­கள், முன்­னாள் மாண­வர்­கள், போதைப் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன­வர்­க­ளின் கைபேசி எண்­க­ளைப் பெற்று தனி­யாக வாட்ஸ்­அப் குழு­வைத் தொடங்கி அதன்மூலம் போதை மாத்­தி­ரை­களை விற்­பனை செய்­து­வந்­த­தா­கக் கூறி­யுள்ளனர்.

இதில் அதிக லாபம் கிடைத்­த­தால் இதையே தங்களது தொழிலாக ஆறு பேரும் கடந்த ஓராண்­டாக செய்து வந்­ததாக­வும் கூறி­னர்.

இதை­யடுத்து, ராஜ­லட்­சுமி, அவ­ரது காத­லன் முத்­துப்­பாண்டி, பூங்­குன்­றன், கோகு­லன், கிஷோர், கிஷோர் குமார் ஆகிய ஆறு பேரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, மருத்­து­வ­ரின் பரிந்­துரை இல்­லா­மல் உட்­கொள்­ளும் இது­போன்ற கருக்­க­லைப்பு மாத்­தி­ரை­க­ளால் உயி­ருக்கே ஆபத்து ஏற்­படும் அபா­யம் உள்ள தாக மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கைதான ராஜ­லட்­சுமி கல்­லூரி மாண­வர்­க­ளி­டம் போதைப் பழக்­கத்தை ஏற்­ப­டுத்தி, இந்த மாத்­தி­ரை­களை விற்­ப­தற்கு மூளை­யாக செயல்­பட்­ட­தாக காவல்துறை அதி காரிகள் தெரி­வித்­த­னர். விசா­ரணை தொடர்கிறது.