'10 நாள்களுக்குள் அடகுவைத்த நகைகள் திருப்பி வழங்கப்படும்'

'10 நாள்களுக்குள் அடகுவைத்த நகைகள் திருப்பி வழங்கப்படும்'

1 mins read
4420b5b4-ac12-4c35-9862-713f3a1f49d1
-

சென்னை: தமி­ழ­கத்­தில் வேளாண் கூட்­டு­றவு வங்­கி­களில் வாங்­கிய தங்க நகைக் கடன் தள்­ளு­படி திட்­டத்­தின்­கீழ், தகுதி உள்­ள­வர்­க­ளுக்கு இம்­மா­தம் 31ஆம் தேதிக்­குள் நகை­கள் திரும்ப வழங்­கப்­படும் என்று கூட்­டு­ற­வுத் துறை அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி தெரி­வித்­துள்­ளார்.

கூட்­டு­றவு வங்­கி­களில் ஐந்து சவ­ர­னுக்­கும் குறை­வாக தங்க நகை­கள் வைத்து கடன் பெற்­ற­வர்­க­ளுக்கு கடன் தள்­ளு­படி செய்­யப்­படும் என்று தேர்­த­லின்­போது ஆளும் திமுக அரசு வாக்­கு­றுதி அளித்­தது. ஆனால், இவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­த­தால் மக்­கள் அதி­ருப்­தி­யில் இருந்­த­னர்.

இந்­நி­லை­யில், இப்­போது, இம்­மா­தம் 31ஆம் தேதிக்­குள் கூட்­டு­றவு வங்­கி­யில் வைக்­கப்­பட்­டுள்ள ரூ.6,000 கோடி மதிப்­புள்ள நகைக்­க­டன்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு, 14 லட்­சத்து 40,000 பேரி­டம் நகை­கள் திரும்­பக் கொடுக்­கப்­படும் என்று அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி நேற்று கூறி­னார்.

"நிதி நிலைமை சீரான பின்­னரே குடும்­பத் தலை­வி­க­ளுக்கு ரூ.1,000 உரி­மைத் தொகை வழங்­கப்­படும்," என்று பொது வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யில் நிதி­ய­மைச்சா் பழனி வேல் தியா­க­ரா­ஜன் ெதரி­வித்­தார். இத­னால் அதி­ருப்­தி­யில் இருந்த மக்­கள், இப்­போது ஆறு­தல் அடைந்­துள்­ள­னர்.