அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன்

அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன்

1 mins read
db15c99b-86b9-4f2d-a0a9-aa5f1968ef78
-

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் வெள்ளியன்று பால்குடம் தூக்கியும் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கதிர்காமம் முருகன், புதுவை ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியர் கோவில், உழந்தைகீரப்பாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்து வந்தும் முருகனை தரிசித்தனர். சென்னையில் உள்ள முருகன் கோயிலில் இப்படி அலகு குத்தி காவடி எடுத்தார் இந்த பக்தர். படம்: ஏஎஃப்பி