சென்னை: ஆசிய நாடுகளில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருவதால் தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 25வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று 50,000 இடங்களில் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர், கடந்த ஏழு நாள்களாக கொரோனா தொற்றின் அளவு 100க்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல் இறப்பும் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் சனிக்கிழமை அன்று 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா-தமிழக எல்லைப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான 13 வழிகள் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்," என்றார்.
"ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரிய அளவில் தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
"தடுப்பூசி மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட ஒரே தீர்வு," என்று அவர் குறிப்பிட்டார்.
"அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாண விகள் படிப்பது அதிகரிக்கும்.
"அனைவரும் பட்டதாரிகளாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 30 லட்சம் மாணவிகள் பட்டதாரி களாக உருவாக இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இது தங்கத்தையும் தாண்டி மாணவிகளை வைரமாக மாற்ற கூடிய நல்ல திட்டம்," என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் மேலும் கூறினார்.

