வேலை வாய்ப்பு முகாமில் 500 நிறுவனங்கள் பங்கேற்பு

வேலை வாய்ப்பு முகாமில் 500 நிறுவனங்கள் பங்கேற்பு

1 mins read
23bfa6e1-e055-4242-aede-28bc49d16950
-

செங்­கல்­பட்டு: செங்­கல்­பட்டு மாவட்­டம் வண்­ட­லூர் அருகே உள்ள தனி­யார் கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்ற வேலை­வாய்ப்பு முகா­மில் 500க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் பங்­கேற்­றன.

இந்­நி­கழ்ச்­சி­யில் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

அப்­போது, வேலை­வாய்ப்பு பெற்­ற­வர்­க­ளுக்கு அவர் பணி நிய­மன ஆணையை வழங்­கி­னார்.

இந்த வேலை­வாய்ப்பு முகா­மில் ஆட்டோமொபைல் நிறு­வ­னங்­கள், கைபேசி உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தனி­யார் நிறு­வ­னங்­களில் உள்ள 50,000க்கும் மேற்­பட்ட பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட உள்­ளன.