39 நொடிகளில் 108 ஓடுகளை கட்டை விரலால் உடைத்து சாதனை

39 நொடிகளில் 108 ஓடுகளை கட்டை விரலால் உடைத்து சாதனை

1 mins read
cd3b8bd4-3e46-433b-aecc-1593927a821f
-

கடலூரில் 39 நொடிகளில் 108 ஓடுகளை தனது கட்டை விரலால் உடைத்த கராத்தே மாணவர் கார்த்திக்கின் சாதனையைப் பாராட்டி 'நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' சார்பில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. கடலூரை அடுத்த கோண்டூர் பெண்ணை நகரைச் சேர்ந்த கார்த்திக், 21, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர், ஓடுகளை உடைத்த போது தனது கட்டைவிரல் காயமடைந்து ரத்தம் வெளியேறியபோதும் தனது சாதனையைக் கைவிடாது செய்துமுடித்தார். அவருக்கு காவல் ஆய்வாளர்களும் பொதுமக்களும் நண்பர்களும் வாழ்த்துகள் கூறினர்.

படம்: ஊடகம்