ஓரிருமுறை மட்டுமே ஜெயலலிதாவை எட்டிப் பார்த்தேன்: இளவரசி

ஓரிருமுறை மட்டுமே ஜெயலலிதாவை எட்டிப் பார்த்தேன்: இளவரசி

2 mins read
8085bf88-0d5e-4c80-b7ba-95afffd400a5
நேற்று விசாரணைக்கு வந்த இளவரசி. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: முன்­னாள் முதல்வா் ஜெயலலி­தா­வின் மர­ணம் தொடர்­பாக விசாரணை நடத்தி வரும் ஆறு­மு­க­சாமி ஆணை­யம் முன்பு முதன்­ மு­றை­யாக முன்­னாள் முதல்­வ­ரும் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான ஓ பன்­னீர்­செல்­வ­மும் சசி­க­லா­வின் அண்­ணன் மனைவி இள­வ­ர­சி­யும் நேற்று முன்­னி­லை­யா­கி­னர்.

இள­வ­ர­சி­யி­டம் நடத்தப்பட்ட விசா­ர­ணை­யின்போது, அப்போலோ மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த மறைந்த முன்­னாள் முதல்வா் ஜெய­ல­லி­தாவை தான் ஓரி­ரு­முறை மட்­டுமே கண்­ணாடி வழி­யாக எட்­டிப் பார்த்­த­தாகக் கூறி­னார்.

"மருத்­து­வ­ம­னை­யில் ஜெய­லலிதா அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போது அவரை சசி­கலா மட்­டுமே உட­னி­ருந்து பார்த்­துக்­கொண்­டார். நான் 75 நாள்களும் மருத்­து­வ­மனைக்­குச் சென்று வந்­தேன். ஆனால், ஓரிரு முறை மட்­டுமே கண்­ணாடி வழி­யாக ஜெய­ல­லி­தாவைப் பார்த்­தேன்.

"கடந்த 2014ஆம் ஆண்டு சிறைக்குச் சென்­ற­போது ஜெய­ல­லிதா உடல்­நலக் குறைவுடனும் மிகுந்த மன உளைச்­ச­லி­லும் இருந்­தார்," என வாக்­கு­மூ­லம் அளித்து உள்ளார்.

இதுவரை எட்டு முறை ஆறு­முக­சாமி ஆணை­யம் அழைப்பாணை அனுப்பியும் முன்னிலையாகாத ஓபிஎஸ், நேற்று முதல்­மு­றை­யாக முன்னிலையானார்.

"ஜெய­ல­லி­தா­வுக்கு நீரி­ழிவு நோய் இருந்­த­தைத் தவிர, அவ­ருக்கு இருந்த வேறு உடல்­ந­லக் குறைபாடு­கள் குறித்து எனக்கு எது­வும் தெரி­யாது. அதே­போல், அவ­ருக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை முறை­கள் குறித்­தும் எனக்கு எது­வும் தெரி­யாது," என ஓ.பன்­னீர்­செல்­வம் வாக்­கு­மூ­லத்தில் கூறியுள்­ளார்.

ஒட்­டு­மொத்­த­மாக, ஜெயலலிதா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டது முதல் அவ­ரது இறப்பு வரை என்ன மாதி­ரி­யான சிகிச்சைகள் அளிக்­கப்­பட்­டன, மருத்­து­வர்­கள் யார் என்­பது குறித்து தனக்கு எது­வுமே தெரி­யாது எனவும் ஓபி­எஸ் ெதரி­வித்­துள்­ளார்.

ஓய்வுபெற்ற உயா்நீ­தி­மன்ற நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யி­லான ஆணை­யம் மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­போது மீண்­டும் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யுள்­ளது குறிப்பிடத்தக்கது.