சங்கிலி பறித்துச் சென்ற 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் கைது

சங்கிலி பறித்துச் சென்ற 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் கைது

1 mins read
2fd8d12e-d82c-4882-9cd6-391346bd1c96
முகம்­மது ஃபைசல். படம்: ஊடகம் -

பெரம்­பூர்: சென்ைன­யில் கடந்த 17ஆம் தேதி முதல் அடுத்­த­டுத்து மூன்று சங்­கிலி பறிப்­புச் சம்­ப­வங்­கள் நடந்­தன. இவை அனைத்­தி­லும் ஒரே ஆட­வ­ருக்­குத் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­தது.

ஏழு கிணறு பகு­தி­யில் உள்ள தங்­கப் பட்­ட­றை­யில் நகையை உருக்­கு­வ­தற்­காக வந்த இளை­ஞரை பூக்­கடை போலி­சார் கையும் கள­வு­மா­கப் பிடித்­த­னர்.

விசா­ர­ணை­யில் அவர் மண்­ணடி, மரக்­கா­யர் தெரு­வைச் சேர்ந்த 22 வயது முகம்­மது ஃபைசல் என்­பது ெதரி­ய­வந்­தது.

இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இளை­யோ­ருக்­கான ஆண­ழ­கன் போட்­டி­யில் 'மிஸ்­டர் இந்­தியா' பட்­டம் வென்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கல்­லூ­ரி­யில் படித்­த­போது துபாய் நண்­பர் ஒரு­வ­ரின மூலம் ஐபோன்­களை வாங்கி அவற்றை குறைந்த விலைக்கு நண்­பர்­க­ளுக்கு விற்று வந்­தார்.

பலர் பணம் தரா­ம­லும் சிலர் குறைத்து பணத்­தைக் கொடுத்­த­தா­லும் ஃபைசல் பெரும் கட­னாளி ஆனார். தொழி­லில் ஏற்­பட்ட நஷ்­டம் கார­ண­மாக கடன் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­க­மு­டி­யா­மல் சங்­கிலி பறிப்­பில் ஈடு­பட்­டதாகவும் அவர் காவல்துறை அதி­கா­ரி­களின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தற்­போ­து­தான் முதல்­மு­றை­யாக அவர் குற்­றச் சம்­பவங்­களில் ஈடு­பட்­டுள்­ளார் என்­ப­தும் ஃபைசலின் தந்தை துபா­யில் பணி­பு­ரிந்து வரு­கி­றார் என்­ப­தும் அவரது குடும்­பத்­தில் உள்­ள­வர்­கள் பொறி­யி­யல், மருத்­து­வம் படித்­த­வர்­கள் என்­ப­தும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

ஃபைசல் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.