சென்னை: சென்னை, கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25,000 சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களைத் தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பெருமாள்களை நேரில் தரிசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

