தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1.75 கோடி ஏமாந்த திரைப்பட நடிகர் விக்னேஷ்

2 mins read
a0a7f733-d3ee-47f4-a270-61fbfc385982
நடிகர் விக்னேஷ். படம்: ஊடகம் -

சென்னை: இரி­டி­யம் விற்­பனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்­கும் என்று ஆசை காட்டி தம்­மி­டம் இருந்து ரூ.1.75 கோடி ரூபாய் பணத்­தைப் பெற்­றுக்கொண்டு ராம்­பி­ரபு என்­ப­வர் மோசடி செய்­து­விட்­ட­தாக பிர­பல திரைப்­பட நடி­கர் விக்­னேஷ் சென்னை காவல்­துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள தமது கடைத்­தொ­குப்­பில் ராம்­பி­ரபு என்­ப­வர் வாட­கைக்கு இருந்­த­தா­க­வும் தம்­மு­டன் நட்­பா­கப் பழ­கி­ய­தா­க­வும் விக்­னேஷ் புகார் மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரி­டி­யம் என்ற பொருளை மத்­திய அர­சின் அனு­ம­தி­யு­டன் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள நிறு­வ­னத்­துக்கு விற்­பனை செய்­த­தா­க­வும் அதன் மதிப்பு ரூ.3 லட்­சம் கோடி என்­றும் ராம்­பி­ரவு கூறி­யதை விக்­னேஷ் நம்பி­ உள்­ளார்.

ராம்­பி­ர­பு­வைச் சுற்றி எந்­நேரமும் கைத்­துப்­பாக்­கி­யு­டன் பாது­கா­லர்­கள் இருந்­துள்­ள­னர். தனது மதிப்பை அறிந்து மத்­திய அரசு இவ்­வாறு பாது­காப்பு அளித்­துள்­ளது என்று அவர் கூறி­யதை விக்­னேஷ் நம்­பி உள்­ளார்.

இந்­நி­லை­யில், இரி­டி­யம் விற்­கும் தொழிலை சட்­ட­பூர்­வ­மாக செய்­வ­தா­க­வும் அதில் முத­லீடு செய்­தால் அதிக லாபம் கிடைக்­கும் என்று ராம்­பி­ரபு கூற, அதை­யும் நம்­பிய விக்­னேஷ், பணத்தை முத­லீடு செய்வது என முடி­வெ­டுத்­துள்­ளார்.

"என்­னி­டம் ரூ.5 லட்­சம் கொடுத்­தால், ரூ.500 கோடி­யாக உங்­க­ளுக்கு திருப்­பித் தரு­வ­தாக நம்­பிக்கை ஊட்­டும் வகை­யில் பேசி­னார் ராம்­பி­ரபு. அதை நம்பி எனது வங்­கிக் கணக்கு மூல­மா­க­வும் நண்­பர்­களிடம் நேர­டிக் கட­னா­க­வும் பெற்று ரூ.1.81 கோடி கொடுத்­தேன்.

"அதற்கு பிறகு அவர் என்­னி­டம் பேசு­வதை தவிர்த்­தார். ஒரு முறை நேரில் சந்­தித்­த­போது, ரூ.500 கோடி கொள்கலன் லாரி மூலம் வரு­கிறது என்­றும் வந்­த­வு­டன் தரு­வ­தா­க­வும் சொன்­னார். ஆனால், பணம் வர­வில்லை," என்று விக்­னேஷ் தமது புகார் மனு­வில் கூறி­யுள்­ளார்.

ராம்­பி­ரபு என்­ப­வர் மேலும் பல­ரி­டம் இதே­போல் பணம் வசூ­லித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது என்­றும் ஏற்­கெ­னவே விரு­து­ந­கர் காவல்­துறை­யி­னர் அவரை கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர் என்­றும் விக்­னேஷ் தெரி­வித்­துள்­ளார். ராம்­பி­ரவு தற்­போது கைதாகி உள்ள நிலை­யில், அவ­ரி­டம் ஐநூ­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஏமாந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் விக்­னேஷ்.