தனியார் நிறுவனத்துக்கு மின் வாரிய திட்டம்: பாஜக புகார்

தனியார் நிறுவனத்துக்கு மின் வாரிய திட்டம்: பாஜக புகார்

1 mins read
72cec12f-4f9e-449a-abc8-960a7aebb0b4
-

அம­ரா­வதி: தமி­ழக மின்­வா­ரி­யத்­தின் புதிய மின் திட்­டத்தை தனி­யார் நிறு­வ­னத்­துக்கு ஒதுக்கி இருப்­ப­தில் முறை­கேடு நடந்­து இ­ருப்­ப­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை குற்­றம்­சாட்டி உள்­ளார்.

மொத்­தம் 4,442 கோடி ரூபாய் மதிப்­புள்ள அத்­திட்­டம் அனைத்து விதி­மு­றை­க­ளை­யும் மீறி குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­ணா­மலை தலை­மை­யில் தமி­ழக பாஜக குழு ஒன்று நேற்று முன்­தி­னம் ஆளு­நர் ஆர்.என்.ரவியை சந்­தித்­தது. அப்­போது பாஜக சார்­பில் ஒரு கோரிக்கை மனு அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய பாஜக மாநி­லத் துணைத் தலை­வர் வி.பி.துரை­சாமி, தமி­ழ­கத்­தின் நலன் குறித்­தும் சட்­டம் ஒழுங்கு குறித்­தும் ஆளு­ந­ரி­டம் பேசி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

"மின்­வா­ரிய ஒப்­பந்­தத்தை பெற்­றுள்ள தனி­யார் நிறு­வ­னம் குறித்து தெளி­வான விளக்­கத்­தை­யும் அறிக்­கை­யை­யும் ஆளு­ந­ரி­டம் கொடுத்­தி­ருக்­கி­றோம். எங்­க­ளு­டைய கோரிக்­கையை கேட்­ட­றிந்த ஆளு­நர், அது­கு­றித்­து பரி­சீ­லிப்­பதாக தெரி­வித்­தி­ருக்­கி­றார்," என்­றார் வி.பி.துரை­சாமி.

தமி­ழக மின்­வா­ரி­யத் திட்­டத்தை தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைத்­த­தில் திமுக அரசு அனைத்து விதி­க­ளை­யும் மீறி உள்­ள­தாக அண்­ணா­மலை டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே பாஜக மாநிலத் தலை­வர் அண்­ணா­மலை எந்­த­வி­த­மான ஆதா­ரங்­களும் இன்றி தமி­ழக அரசு குறித்து அவ­தூறு பரப்­பு­வ­தாக மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

மின் வாரி­யத்­தின் மீதான குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்­க­வில்லை என்­றால் அண்­ணா­மலை மீது சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் எச்ச­ரித்­துள்­ளார்.