வைகோவுக்கு மூன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு

வைகோவுக்கு மூன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு

2 mins read
0b16130d-f5b1-476c-a222-f715e1dd3d31
விமான நிலையத்தில் மகன் துரை வையாபுரியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கோப்புப்படம்: ஊடகம் -

மகனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு

சிவ­கங்கை: மதி­முக பொதுச் செய­லா­ளர் வைகோ கட்­சிக் கொள்கைக்கு விரோ­த­மாக தனது மகனை துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மித்­துள்­ள­தாக அக்­கட்­சி­யின் மூன்று மாவட்­டச் செய­லா­ளர்­கள் போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து வைகோ­வுக்கு இனி ஒத்­து­ழைப்பு தரு­வ­தில்லை என முடி­வெ­டுத்­துள்­ள­தாக அவர்­கள் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ள­னர்.

மேலும், மதி­மு­கவை கலைத்து­விட்டு, திமு­க­வு­டன் இணைக்க வேண்­டும் என்­றும் அவர்கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர். இத­னால் மதி­முக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பு நிலவி வரு­கிறது. ஒரு தரப்­பி­னர் வைகோ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், பத்து மாவட்­டச் செய­லா­ளர்­கள் கட்­சித் தலை­மைக்கு எதி­ராக வரிந்து கட்­டி­க்கொண்டு செயல்படுவ­தாக கூறப்படுகிறது.

புல­வர் செவந்­தியப்­பன் (சிவ­கங்கை), சண்­மு­க ­சுந்­த­ரம் (விரு­து­ந­கர்), செங்­குட்­டு­வன் (திரு­வள்­ளூர்) ஆகி­யோர் நேற்று முன்­தி­னம் சிவ­கங்­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது, வைகோ தனது மகனை கட்­சி­யின் துணைப் பொதுச் செய­லா­ள­ராக நிய­மிக்க பத்­துக்­கும் மேற்­பட்ட மாவட்­டச் செய­லா­ளர்­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­தா­கக் குறிப்­பிட்­ட­னர்.

திமு­க­வில் குடும்ப அர­சி­யல் இருப்­ப­தா­கக் கூறித்­தான் திமுகவில் இருந்து மதி­முக பிரிந்­தது என்று அவர்­கள் நினை­வூட்­டி­னர்.

இதற்­கி­டையே, இம்­மூ­வ­ரும் சிவ­கங்கை மாவட்ட மதி­முக அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­களை சந்­திப்­பதை அறிந்த வைகோ ஆத­ர­வா­ளர்­கள் திடீ­ரென அங்கு திர­ளா­கக் கூடி மூவ­ருக்­கும் எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­புக்­கும் இடையே மோதல் வெடிப்­பதை தடுக்­கும் பொருட்டு, அங்கு காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி கலைந்­து­போ­கச் செய்­த­னர்.

வைகோ­வுக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள மாவட்­டச் செய­லா­ளர்­கள் ஒருங்­கி­ணைந்து கட்­சித் தலை­மைக்கு எதி­ராக போராட்­டங்­கள் நடத்த வாய்ப்­புள்­ள­தா­க­க் கூறப்­ப­டு­கிறது. இதற்கிடையே கட்சி நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.