பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரத் தடை: தமிழக அரசு அதிரடி

பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரத் தடை: தமிழக அரசு அதிரடி

2 mins read
407ca08b-2c84-4974-acee-ad473b644a4e
சென்னை மாநகரப் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் இனி பள்ளி மாண­வர்­கள் இரு­சக்­கர வாக­னங்­களில் பள்­ளிக்கு வரக்­கூ­டாது என பள்­ளிக்­கல்­வித்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

அவ்­வாறு இரு­சக்­கர வாக­னங்­களில் வரும் மாண­வர்­களை பள்ளி வளா­கத்­திற்­குள் அனு­ம­திக்­கக்­கூடாது என்­றும் அந்த உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சென்னை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் அடிக்­கடி பந்­த­யம் கட்டி போக்­கு­வ­ரத்­து நெரிசல் உள்ள முக்­கிய சாலை­களில் இரு­சக்­கர வாக­னங்­களை ஆபத்­தான முறையில் ஓட்­டிச் செல்­கின்­ற­னர்.

மேலும், பேருந்து படிக்­கட்­டு­களில் தொங்­கி­ய­படி செல்­வது, பேருந்து தினம் கொண்­டா­டும்­போது வரம்பு மீறு­வது எனப் பல்­வேறு ஒழுங்­கீ­ன­மான நட­வ­டிக்­கை­களில் மாண­வர்­கள் ஈடு­ப­டு­வ­தா­கப் புகார்­கள் எழுந்­துள்­ளன.

இதை­ய­டுத்து, அரசு, தனி­யார் பேருந்­து­களின் படிக்­கட்­டு­களில் தொங்­கி­ய­படி மாண­வர்­கள் பய­ணம் செய்­வதை தடுக்க வேண்­டும் என்­றும் பேருந்­தில் கூட்­ட­மாக மாண­வர்­கள் செல்­வ­தைத் தவிர்க்க பள்ளி முடிந்தபின் 15 நிமிட இடை­வெ­ளி­யில் மாண­வர்­களைத் தனித்­தனி குழுக்­க­ளாகப் பிரித்து அனுப்ப வேண்டும் என்­றும் பள்­ளிக்­ கல்வித்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும் ஒழுங்­கீ­ன­மாக நடந்து கொள்­ளும் மாண­வர்­களை பள்ளி நிர்­வா­கம் அடை­யா­ளம் காண கண்­கா­ணிப்­பா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அத்­த­கைய மாண­வர்­க­ளுக்கு உரிய நிபு­ணர்­க­ளைக் கொண்டு மன­நல ஆலோ­சனை வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் பள்­ளிக்­ கல்­வித்­துறை மேலும் அறி­வு­றுத்தி உள்­ளது.

அண்­மைக்­ கா­ல­மாக தமி­ழ­கப் பள்­ளி­களில் மாண­வர்­கள் ஒழுங்­கீ­ன­மாக நடந்து கொள்­வ­தா­கப் பல்­வேறு புகார்­கள் எழுந்­துள்­ளன.

தேனி மாவட்­டத்­தில் அரசுப்­பள்ளி ஆசி­ரி­யரிடம் படிக்­கும் மாண­வரே மிரட்­டும் தொனி­யில் பேசி உள்­ளார்.

மற்­றொரு பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ரைச் சுற்றி நின்று மாண­வர்­கள் பல­மா­கக் கை­தட்டி கேலி செய்­துள்­ள­னர்.

இது­போன்ற சம்­ப­வங்­கள் குறித்து ஊட­கங்­களில் தொடர்ந்து செய்­தி­கள் வெளி­யா­கின்­றன.