ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பி

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பி

1 mins read
322cf7f2-cf64-4a07-b259-df1d0bb577e5
ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் சிவப்பு நிற ரப்பர் குப்பிகள். படம்: ஊடகம் -

புதுக்­கோட்டை: ஜல்­லிக்­கட்­டின்­போது மாடு­பிடி வீரர்­கள் காய­ம­டை­யா­மல் இருக்க காளை­களின் கொம்­பு­களில் ரப்­பர் குப்­பி­கள் பொருத்­த­லாம் என இந்­திய கால்­நடை நல வாரிய ஜல்­லிக்­கட்டு கண்­கா­ணிப்பு அலு­வ­லர் எஸ்.கே.மிட்­டல் ஆலோ­சனை வழங்கி உள்­ளார்.

இதை­ய­டுத்து புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் கடந்த 19ஆம் தேதி ஜல்­லிக்­கட்டு நடை­பெற்ற இரண்டு இடங்­களில் சில காளை­க­ளின் கொம்­பு­களில் ரப்­பர் குப்­பி­கள் பொருத்தி அவிழ்த்து விடப்­பட்­டுள்­ளன. அம்­மா­வட்­டத்­தில் மற்ற இடங்­களில் நடை­பெற உள்ள போட்­டி­க­ளி­லும் காளை­க­ளின் கொம்­பு­களில் ரப்­பர் குப்­பி­கள் பொருத்த வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு மாடுபிடி வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.