பாலியல் வன்கொடுமை: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

பாலியல் வன்கொடுமை: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

2 mins read
743af0e8-33ee-4c94-9257-5616526ce951
-

சென்னை: இளம்பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய விரு­து­ந­க­ரைச் சேர்ந்த திமுக உறுப்­பி­னர் அக்­கட்­சியை விட்டு நீக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இது தொடர்­பான வழக்கை காவல்­து­றை­யின் சிபி­சி­ஐடி பிரிவு விசா­ரிக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

பொள்­ளாச்­சி­யில் நடந்த கொடூர பாலி­யல் சம்­ப­வத்­தைப் போல் விருது­ந­க­ரி­லும் ஒரு சம்­ப­வம் அரங்­கேறி உள்­ளது.

அங்கு தனி­யார் ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்து வந்த 22 வயது இளம்பெண்ணை திமு­க­வைச் சேர்ந்த ஹரி­ஹ­ரன் என்­ப­வர் காத­லித்­துள்­ளார். இரு­வ­ரும் அவ்­வப்­போது தனி­மை­யில் சந்­தித்­துள்­ள­னர்.

அப்­போது அந்­தப் பெண்­ணுக்­குத் தெரி­யா­மல் எடுக்­கப்­பட்ட காணொ­ளியை அதே பகு­தி­யைச் சேர்ந்த திமுக நிர்­வாகி ஜீனைத் அக­மது உள்­ளிட்ட நான்கு பேர் பார்த்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, அந்­தக் காணொ­ளிப் பதி­வைக் காண்­பித்து அந்த இளம்பெண்ணை சீர­ழித்­துள்­ளார் ஜீனைத் அக­மது. அதே­போல், ஹரி­ஹ­ரன் உள்­ளிட்ட மேலும் ஏழு பேர் இது­போன்று அத்­து­மீறி உள்­ள­னர். அவர்­களில் இரு­வர் பள்ளி மாண­வர்­கள் ஆவர்.

ஒரு கட்­டத்­தில், இவர்­க­ளின் கொடு­மை­யைத் தாங்­கிக்­கொள்ள முடி­யாத அந்த இளம் பெண் காவல்­து­றை­யில் புகார் அளித்­ததை அடுத்து, நடந்த சம்­ப­வங்­கள் அம்­ப­ல­மா­கின.

இதை­ய­டுத்து, பள்ளி மாண­வர்­கள் இரு­வர், கூலித் தொழி­லா­ளர்­கள் இரு­வர் உள்­ளிட்ட எட்டு பேரை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

இந்­நி­லை­யில், குற்­ற­வாளி களுக்கு கடும் தண்­டனை வழங்க வேண்­டும் என்று பல்­வேறு கட்­சித் தலை­வர்­களும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

திமுக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் கனி­மொழி முதல் கட்ட விசா­ர­ணை­யில், சிலர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது ஆறு­தல் அளித்­தா­லும், இளம்பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கிய அனை­வ­ரும் கடு­மை­யா­கத் தண்­டிக்­கப்­பட வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், பெண்ணை பாலி­யல் வன்­கொ­டுமை செய்த புகா­ரில் கைது செய்­யப்­பட்­டுள்ள ஜீனைத் அக­மது திமு­க­வில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்டுள்­ளார்.