சென்னை: சென்னை துறைமுக அறக்கட்டளையின் நூறு கோடி ரூபாய் தொகையை மோசடி செய்து அபகரிக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் துறைமுக அதிகாரி ரகுபெர்னார்ட் கைதானார்.
அறக்கட்டளை பணத்தை வைப்புத்தொகையாகச் செலுத்திய வங்கியில் கணேஷ் நடராஜன் என்பவர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டது.
அவர் சென்னை துறைமுகத்தின் நிதிப் பிரிவு துணை இயக்குநர் என்பதற்கான போலி ஆவணங்களைக் காண்பித்து கணக்கு தொடங்கப்பட்ட நிலையில், அறக்கட்டளை பணத்தை அவ்வப்போது தன் கணக்குக்கு மாற்றியுள்ளார் கணேஷ்.
அவர் ரூ.45 கோடி வரை சுருட்டிய நிலையில், இந்த மோசடி அம்பலமானது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த நூதன மோசடியில், வெளிநாட்டைச் சேர்ந்த இருவர், வங்கி மேலாளர் உட்பட பலர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
அனைவரும் கைதான நிலையில், துறைமுக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ரகுபெர்னார்ட் வங்கியில் இருந்த வைப்புத்தொகையை விரைவாக கணேஷ் நடராஜன் கணக்குக்கு மாற்ற உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கைதானார்.

