சென்னை: தமிழகத்தின் ஒட்டுமொத்த வனப்பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆண்டுதோறும் இனி சராசரியாக 320 மில்லியன் மரக்கன்றுகள் நடப்படும் என்று சட்டப்பேரவையில் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் பசுமை மாநிலமாக உருவெடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

