தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்கள்

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்கள்

2 mins read
a9ed2193-c013-4107-b3d9-e6e9896c2f26
இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து தமிழகம் வந்தவர்கள். படம்: ஊடகம் -

ராமே­சு­வரம்: கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இலங்­கை­யில் இருந்து தமி­ழர்­கள் பலர் தமி­ழ­கத்­துக்கு வரத்­தொ­டங்கி உள்­ள­னர்.

இலங்­கை­யில் எந்­த­வி­த­மான அத்­தி­யா­வ­சியப் பொருள்­களும் கிடைக்­கா­மல் மக்­கள் திண்­டாடி வரு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இலங்­கை­யில் இருந்து பட­கு­களில் வந்து சேரும் தமி­ழர்­களை பட­கோட்­டிகள் தனுஷ்­கோடி அருகே உள்ள கடற்­ப­கு­தி­யில் காணப்­படும் மணல்­திட்­டில் இறக்­கி­விட்டு மீண்­டும் இலங்­கைக்கு திருப்­பிச் சென்று­வி­டு­கின்­ற­னர்.

மணல்­திட்­டில் யாரே­னும் இருப்­பது தெரி­ய­வந்­தால் தமி­ழக மீன­வர்­கள் இந்­திய கட­லோர காவல் படைக்கு தக­வல் தெரி­விக்க, அதன் பின்­னர் அவர்­கள் மீட்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இலங்­கை­யில் இருந்து தின­மும் சில குடும்­பங்­கள் தமி­ழ­கம் வந்து சேர்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­களை மீட்டு உண­வுப் பொருள்­கள் வழங்­கி­னா­லும், கட­லோ­ரக் காவல் படை­யின் தக­வ­லின் பேரில் காவல்­து­றை­யின் கியூ பிரிவு அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்தி, பின்­னர் வழக்­குப்­ப­திவு செய்­கிறது.

அக­தி­க­ளாக வரும் இலங்­கைத் தமி­ழர்­கள் பட­கோட்­டி­க­ளி­டம் 50 ஆயி­ரம், ஒரு லட்­சம் ரூபாய் என பணம் கொடுத்­த­தாக கூறி­யுள்­ள­னர்.

இலங்­கை­யில் உள்­நாட்­டுப் போரால் பாதிக்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் முன்பு அக­தி­க­ளாக தமி­ழ­கத்­தில் தஞ்­சம் புகுந்­த­னர்.

உள்­நாட்­டுப் போர் முடி­வுக்கு வந்­த­தும் அவர்­களில் ஏரா­ள­மா­னோர் 2012ஆம் ஆண்டு மீண்­டும் இலங்கை சென்­ற­னர்.

இந்­நி­லை­யில், 10 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் அக­தி­க­ளாக தனுஷ்­கோ­டிக்கு வந்­துள்­ள­தா­க­வும் எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு தொடங்கிய பின் இலங்­கை­யில் இருந்து ஏரா­ள­மான தமி­ழர்­கள் தமி­ழ­கத்­துக்கு அக­தி­க­ளாக வர காத்­துக்­கி­டப்­ப­தா­க­வும் தனுஷ்­கோடி வந்­த­டைந்த இலங்­கைத் தமி­ழர்­கள் சிலர் கண்­ணீர் மல்க கூறி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மேலும் ஐந்து குழந்­தை­கள், மூன்று பெண்­கள் உட்­பட பத்து பேர் நேற்று முன்­தினம் மன்­னா­ரில் இருந்து தனுஷ்­கோடி வந்­த­டைந்­த­னர்.

இவர்­கள் வந்த பட­கில் இன்­ஜின் கோளாறு ஏற்­பட்டு சுமார் 37 மணி நேரம் நடுக்­க­ட­லில் தத்­த­ளித்­துள்­ள­னர். அதன் பிறகு எப்­படியோ அந்­தக் கோளாறு சரி­செய்­யப்­பட்டு தனுஷ்­கோடி வடக்கு பாலம் மீன்­பிடி துறை­மு­கத்­திற்கு வந்து சேர்ந்­த­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த சில தினங்­களில் மட்­டும் இலங்­கை­யில் இருந்து 16 பேர் தனுஷ்­கோடி பகு­திக்கு அக­தி­களாக வந்து சேர்ந்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் இந்தியக் கடலோரக் காவல்படையினர் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளியல் நெருக்கடியால் பாதிப்பு