திருமண ஆசை காட்டி 20 பெண்களை சீரழித்தவர் கைது

திருமண ஆசை காட்டி 20 பெண்களை சீரழித்தவர் கைது

1 mins read
51a95089-cd50-4aa6-8cea-5ad0cb876668
-

சென்னை: திரு­மண ஆசை காட்டி­யும் விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­க­லாம் என்று கூறி நம்ப வைத்­தும் பல இளம் பெண்­க­ளைச் சீர­ழித்த 27 வய­தான முக­மது ஷயாத் என்ற ஆட­வரை சென்னை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

இவ­ரது கைபே­சி­யில் ஏரா­ள­மான ஆபா­சப் படங்­களும் காணொ­ளி­களும் இருப்­ப­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

போதைப் பழக்­கம் உள்ள ஷயாத் பல்­வேறு இரவு விடு­தி­க­ளுக்கு இளம் பெண்­களை அழைத்­துச் சென்று உல்­லா­ச­மாக இருந்­துள்­ளார். இது­வரை 20 பெண்­களை திரு­மண ஆசை காட்டி பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவர் வாக்­கு­மூ­லம் அளித்­துள்ள நிலை­யில், 40 பெண்­கள் அவ­ரால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என காவல்­துறை கரு­து­கிறது.

திரைப்­ப­டங்­களில் நடிக்க வாய்ப்பு தேடும் பெண்­க­ளைக் கவர்ச்­சி­யா­கப் படம் எடுத்து, வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைத்­த­து­டன், பல பெண்­களை துபாய் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அழைத்­துச் சென்­றுள்­ளார் ஷயாத்.

கடந்த ஆறு மாதங்­களில் மட்டும் பல்­வேறு உயர் ரக தங்­கு­விடுதி­களில் நூறு அறை­களை முன்­பதிவு செய்து இளம்­பெண்­களு­டன் உல்­லா­சம் அனு­ப­வித்­த­தாக அவர் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.