தமிழ்நாடு: பேருந்தில் மாணவர்கள் மது அருந்தியதன் தொடர்பில் விசாரணை

தமிழ்நாடு: பேருந்தில் மாணவர்கள் மது அருந்தியதன் தொடர்பில் விசாரணை

1 mins read
84842b2b-8e85-4f36-99ab-6d7c79358198
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மது அருந்துவதைக் காட்டும் காட்சிகள் காணொளியில் இடம்பெற்றன. படம்: இணையம் -

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மது அருந்துவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

ஆண்கள், பெண்கள் அடங்கிய அந்த மாணவர் குழு, மது போத்தலைத் திறந்து அருந்தினர். அந்தப் பேருந்தில் மற்ற பயணிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சீருடை அணிந்திருந்த அந்த மாணவர்கள், செங்கல்பட்டில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.