சென்னை: துபாயில் நடைபெற்று வரும் அனைத்துலகத் தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக அரசுமுறைப் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றாா்.
இன்று 25ஆம் தேதி முதல் 31ஆம் ேததி வரை உலகக் கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டு அரங்கில் 'தமிழ்நாடு வாரம்' கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த அரங்கை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.
இவ்வரங்கில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டும் வண்ணம் காட்சிப் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தனது துபாய், அபுதாபி பயணத்தின்போது, தமிழ்நாட்டுக்கு மேலும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அங்குள்ள அமைச்சர்கள், முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார்.
அங்குள்ள புலம்பெயர் தமிழர் களைச் சந்தித்துப் பேசவும் திட்டம் உள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

