இலங்கை அகதிகளுக்காக 150 வீடுகள் தயார் நிலை

இலங்கை அகதிகளுக்காக 150 வீடுகள் தயார் நிலை

2 mins read
19d2ca0f-0b8f-493a-bc7c-827b1ee9af20
பட்­டினிச் சாவுக்­குப் பயந்து 37 மணி நேரமாக உயி­ரைக் கையில் பிடித்­துக்­கொண்டு தனுஷ்­கோ­டிக்கு வந்­துள்­ள­தாகக் கூறியுள்ள இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கொக்குபடையான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -

ராமேஸ்­வ­ரம்: தமி­ழ­கத்­தில் அடைக்­க­லம் புகுந்­துள்ள இலங்­கைத் தமிழ் அக­தி­கள் தமி­ழர் மறு­வாழ்வு முகாம்­களில் தங்­க­வைக்­கப்­ப­டு­வார்­கள் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இலங்­கைத் தமி­ழர்­கள் 16 பேரை­யும் சிறை­யில் அடைக்­கும் உத்­த­ரவு நிறுத்திவைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மனி­தா­பிமான அடிப்­ப­டை­யில் அவர்­கள் அனை­ வ­ரை­யும் மண்­ட­பம் அக­தி­கள் மறு­வாழ்வு முகா­மில் தங்க வைக்க அரசு சிறப்பு உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்­ளது.

அத்­து­டன், இம்முகா­மில் 150 வீடு­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உணவு வழங்குவதற்கு என 30 சமை­யல்­கா­ரர்­களும் உத­வி­யா­ளர்­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும் கூறப்படுகிறது.

இலங்­கை­யில் நில­வும் கடும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக, இலங்­கைத் தமி­ழர்­கள் 16 பேர் அக­தி­க­ளாக கடந்த இரு நாள்களாக தமி­ழ­கத்­தில் அடைக்­க­லம் புகுந்­துள்­ள­னர்.

இவர்­க­ளைப் போல் இன்­னும் ஆயி­ரக்­க­ணக்­கான மீன­வக் குடும்­பங்­கள் வேலை இழப்பு, விலை­வாசி உயர்வு, வாழ்­வா­தா­ரம் பாதிப்பு உள்­ளிட்ட கார­ணங்களால் ஓரிரு நாள் களில் தமி­ழ­கம் வர திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­ தக­வல்­கள் குறிப்பிட்டுள்­ளன.

இதை­ய­டுத்து, நாகை, கோடியக் கரையில் அகதிகளின் வருகையை ரோவர் கிராப்ட் சுற்றுக்காவல் கப்பல் கண்காணித்து வருகிறது.

முன்னதாக, தனுஷ்­கோடி கடல் துறை அதி­கா­ரி­கள், 16 இலங்­கைத் தமி­ழர்­களும் உரிய ஆவ­ணங்­கள் இன்றி சட்­ட­வி­ரோ­த­மாக தமி­ழ­கத்­திற்­குள் நுழைந்­த­தாக வழக்­குப் பதிந்து, ராமேஸ்வரம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர்.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி, அவர்களைப் புழல் சிறை­யில் அடைக்க உத்­தரவிட்­டி­ருந்­தார்.

ஒன்­பது வயது சிறு­வனை வேலூ­ரில் உள்ள உற­வி­னர் வீட்­டில் ஒப்­ப­டைக்­க­வும் இரண்டு கைக்­கு­ழந்­தை­களைத் தாயு­டன் சேர்த்தே சிறைக்கு அனுப்­ப­வும் சிறை­யில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வசதி­களைச் செய்து கொடுக்­க­வும் நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

இந்­தச் சூழ­லில் அக­தி­க­ளாக வந்­த­வர்­களை சிறை­யி­ல­டைக்க வேண்­டாம். மனி­தா­பி­மான அடிப்­படை­யில் அவர்­களை மறு­வாழ்வு முகா­மில் தங்கவைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தமி­ழக அரசு சிறப்பு உத்­த­ரவைப் பிறப்­பித்­தது.