செட்டிப்பட்டு: புதுச்சேரியில் உள்ள செட்டிப்பட்டு என்ற கிராமம் 'காவலர்கள் கிராமம்' என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலானோர் காவலர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
அத்துடன், அண்மையில் நடந்து முடிந்துள்ள காவலர் பணிக்கான தேர்விலும் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஒரே சமயத்தில் தேர்ச்சிபெற்று இப்போது ெவற்றி யைக் கொண்டாடி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தமிழக காவல்துறையிலும் செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர், ஏட்டு, காவல்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படை வீரர்கள், பெண் காவலர்கள் என பல்வேறு பிரிவுகளிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
"எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் அதிகமானோர் புதுச்சேரி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் காட்டிலும் வேறு என்ன வேண்டும் எங்கள் கிராமத்துக்குப் பாதுகாப்பு?" என செட்டிப்பட்டு மக்கள் பெருமிதம் அடைகின்றனர்.

