வேலுார்: டெல்லியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கிரண் வர்மா. இவர் இந்திய மக்களிடையே ரத்த நன்கொடை வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 21,000 கி.மீ. தூர நடைப்பயணத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் தொடங்கினார்.
நேற்று வேலூர் வந்த இவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா பரவலுக்குப் பிறகு ரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று வருந்தியவர், "2025ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ரத்தத்திற்காக காத்திருந்து யாரும் இறக்கக்கூடாது என்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைப்பயணம் மேற்கொள்கிறேன். ஐந்து மில்லியன் இளைஞர்கள் ரத்ததானம் செய்யத் தொடங்கினால் போதும். இந்தியாவில் ஒரு மரணம் கூட ஏற்படாது," என்றார்.

