தமிழக மீனவர்கள் 16 பேர் சிறையில் அடைப்பு; மறுபுறம் 22 பேர் விடுவிப்பு

தமிழக மீனவர்கள் 16 பேர் சிறையில் அடைப்பு; மறுபுறம் 22 பேர் விடுவிப்பு

1 mins read
d2dd5e90-efc3-4407-8413-a81b0d582090
-

ராமேஸ்­வ­ரம்: தமி­ழக மீன­வர்­கள் ஒரு­பு­றம் 16 ேபர் கைது செய்­யட்­டுள்ள நிலை­யில், மறு­பு­றம் 22 பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தாகக் கூறி தமி­ழக மீன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வது தொடர்­க­தை­யாகி வரு­கிறது. கைதான மீன­வர்­களை விடு­விக்­கும்­படி மத்­திய-மாநில அர­சு­களும் அவ்­வப்­போது வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

புதன்­கி­ழமை நள்­ளி­ர­வில் நடுக்­க­ட­லில் மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த ராமேஸ்­வ­ரத்­தைச் சேர்ந்த 16 மீன­வர்­களை தங்­க­ளது எல்லை யைத் தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­த­னர். அத்­து­டன், அவர்­க­ளது இரு விசைப்­ப­டகு களை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, மீன­வர்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி மீன­வக் குடும்­பத்­தி­னர் தமி­ழக அரசை கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

மறு­பு­றம், நாகப்­பட்­டி­னம், காரைக்­கால் கடற்­க­ரை­யில் இருந்து கடந்த பிப்­ர­வரி மாதம் 23ஆம் தேதி பாக் ஜல­சந்தி கட­லில் மீன்­பி­டிக்­கச் சென்ற 22 மீன­வர்­களைக் கைது செய்­து, இரு பட­கு­க­ளை­யும் இலங்கை கடற்­ப­டை­யி­னர் பறி­மு­தல் செய்தனர்.

விசா­ர­ணைக் கைதி­க­ளாக யாழ்ப்­பா­ணம் சிறை­யில் இருந்த 22 மீன­வர்­க­ளை­யும் இலங்கை காவல்­து­றை­யி­னர் ஊர்க்­கா­வல்­துறை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர்.

நீதி­பதி கஜ­நி­தி­பா­லன் விசா­ரணை நடத்தி 22 தமி­ழக மீன­வர்­க­ளை­யும் விடு­தலை செய்து உத்­த­ர­விட்­டார். அத்­து­டன், கைப்­பற்­றப்­பட்ட இரு பட­கு­களில் ஒரு படகை அர­சுை­ட­மை­யாக்கி உத்­த­ர­விட்­டார்.

விடு­தலை செய்­யப்­பட்ட 22 மீன­வர்­களும் ஒரு­சில நாள்­களில் தமி­ ழ­கம் திரும்­பு­வார்­கள் என இலங்கை அதி­கா­ரி­கள் கூறியுள்ளனர்.