சென்னை: கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக சட்டப்பேரவை யில் கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும் அத்திட்டத்தை முழுமையாக முடிப்பதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் ரூ.1,902 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
340 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை: மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலையப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தெய்வம், ஜெயக்குமார், ரமேஷ், ராஜேந்திரன் ஆகிய நால்வரை காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 340 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

