நடனமாடிய நடனக் கலைஞர் மேடையிலேயே மரணம்

மதுரை: மது­ரை­யில் தெப்­பக்­கு­ளம் மாரி­யம்­மன் கோயில் நிகழ்ச்­சி­யில் பர­தம் ஆடிய பரத நாட்­டி­யக் கலை­ஞர் காளி­தாஸ் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­ தால் கோயில் பக்­தர்­கள் அதிர்ச்சி­ய­டைந்­துள்­ள­னர்.

வண்­டி­யூர் தெப்­பக்­கு­ளம் மாரி­யம்­மன் கோயி­லில் பர­தம், கர­காட்­டம், ஒயி­லாட்­டம், மயி­லாட்­டம் என பல்­வேறு நடன நிகழ்ச்­சி­க­ளு­டன் பங்­குனி திரு­விழா வரு­டந்­தோ­றும் நடை­பெ­றும்.

இவ்­வாண்டு விழா புதன்­கி­ழமை இரவு நடை­பெற்­றது. அப்­போது பூச்­சொ­ரி­தல் விழா­வில் பர­த­நாட்­டி­யக் கலை­ஞர் காளி­தாசின் பர­த­நாட்­டிய நிகழ்ச்சி நடை­பெற்­றது.

'எல்­லாம் வல்ல தாயே' என்ற பாட­லுக்கு தானும் தனது மாண­வர்­கள் மற்­றும் மக­ளு­டன் அவர் நட­ன­மா­டி­னார்.

அந்த சம­யத்­தில் நெஞ்சை பிடித்­த­படி நாற்­கா­லி­யில் அவர் அமர்ந்தார். அதே நிலை­யி­லேயே அவ­ரது உயிர் பிரிந்­தது.

திரு காளி­தா­ஸ், 54, இளம் வய­தி­லேயே நாட்­டி­யம் மீது ஆர்­வம் கொண்­ட­வர். ஒரு நாட்­டி­யப் பள்­ளி­யை­யும் அவர் நடத்தி வரு­கி­றார். அவ­ரது மகன் விஷ்வ ஹர்­ஷன் மிரு­தங்க வித்­து­வா­னா­க­வும் மகள் பிரி­ய­தர்­ஷினி பர­த­நாட்­டி­யக் கலை­ஞ­ரா­க­வும் மனைவி பானு­மதி கர்­நா­டக சங்­கீத ஆசி­ரி­யை­யா­க­வும் கலைக்குத் தொண்­டாற்றி வரு­கின்­ற­னர்.

'ஆடல் வல்­லான்' விருது, 'கெள­ரவ முனைவர் பட்­டம்', ஆயி­ரத்துக்­கும் மேற்­பட்ட பதக்­கங்­களை வாங்­கி­யுள்ள காளி­தாஸ், தனக்கு 'கலை­மா­மணி விருது' கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்­பி­லும் இருந்து­உள்­ளார். இந்த நிலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது அவரது உயிர் பிரிந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. "திடீர் இறப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மூன்று நாள்களாக அவர் சோர்வுடன் இருந்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் கூறினர். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு சர்க்கரை அளவு சீராக இருப்பதையும் உறுதி செய்தோம்," என்று பானுமதி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!