கூட்டு வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் விசாரணை

கூட்டு வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் விசாரணை

2 mins read
bd2ca3ad-a916-4071-9b39-1b38766d3ade
-

விரு­து­ந­கர்: விரு­து­ந­க­ரில் பல­ரால் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான இளம்­பெண்­ணி­டம் சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­னர் நேற்று காலை விசா­ரணை நடத்­தி­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் கைது செய்­யப்­பட்ட நபர்­களை காவ­லில் வைத்து விசா­ரிக்க அனு­மதி கோரி ஸ்ரீவில்­லி­புத்­தூ­ரில் உள்ள நீதி­மன்­றத்­தில் சிபி­சி­ஐடி காவல்­துறை அதி­கா­ரி­கள் மனுத் தாக்­கல் செய்­ய­உள்­ள­னர்.

விரு­து­ந­க­ரில் 22 வயது இளம்­பெண் ஒரு­வர் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்ட வழக்­கில் ஹரி­ஹ­ரன், ஜுனத் அக­மது, மாட­சாமி, பிர­வீன் மற்­றும் பள்ளி மாண­வர்­கள் நால்­வர் என எட்­டுப் பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

வியா­ழன் மாலை இந்த வழக்கு விசா­ரணை சிபி­சி­ஐடி அதி­காரி களி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட எட்­டுப் பேர் மீது ஆறு பிரிவு களின் கீழ் சிபி­சி­ஐடி அதி­கா­ரி­கள் புதி­தாக வழக்­குப்­ப­திவு செய்­த­னர்.

நேற்று காலை விரு­து­ந­கர் சிபி­சி­ஐடி அலு­வ­ல­கத்­தில் டிஎஸ்­பிக்­கள் சர­வ­ணன் மற்­றும் சிறப்­புப் புல­னாய்வுப் பிரிவு அதி­காரி வினோ­தினி ஆகி­யோ­ரி­டம் சிபி­சி­ஐடி எஸ்.பி. முத்­த­ரசி ஆலோ­சனை நடத்­தி­னார்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்­கில் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள ஹரி­ஹ­ரன் உள்­ளிட்ட 4 பேரை­யும் ராம­நாத புரத்­தில் உள்ள கூர்­நோக்கு இல்­லத்­தில் அடைக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­கள் நால்­வ­ரை­யும் காவ­லில் எடுத்து விசா­ரிக்க திட்­ட­மி­டப்பட்­டது.

இதற்­காக ஸ்ரீவில்­லி­புத்­தூ­ரில் உள்ள வன்­கொ­டுமை தடுப்­புச்­சட்ட நீதி­மன்­றத்­தில் சிபி­சி­ஐடி தரப்­பில் எஸ்.பி. முத்­த­ரசி, டிஎஸ்­பிக்­கள், ஆய்­வா­ளர் சாவித்­திரி ஆகி­யோர் நேரில் சென்று மனு தாக்­கல் செய்­ய­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே தென் மாவட்­டங்­ க­ளைச் சேர்ந்த சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­னர் விரு­து­ந­க­ருக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் ஐந்து குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு விசா­ர­ணையைத் தீவி­ரப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­னர். அதன் முதல் கட்­ட­மாக பாதிக்­கப்­பட்ட இளம்­பெண்ணிடம் காப்­ப­கத்­தில் சென்று சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­னர் நேற்று காலை விசா­ரணை நடத்­தி­னர். கைதா­ன­வர்­க­ளின் வீடு­கள் மற்­றும் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்ட இடங்­க­ளுக்­குச் சென்று தட­யங்­க­ளை­யும் மற்­றும் அங்கு உள்ள பிற ஆவ­ணங்­களைக் கைப்­பற்­ற­வும் சிபி­சி­ஐடி திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி கிறது.