துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காணொளியைக் கண்டுகளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அந்த அழகிய காட்சிப்படத்தை திரு ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 25) பார்வையிட்டார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, நான்கு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள திரு ஸ்டாலின், 'துபாய் எக்ஸ்போ 2020' கண்காட்சியில் நேற்று பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார்.


