குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம்

2 mins read
dfc9efc2-2130-4c6f-b84b-543de0b10383
குல­சே­க­ரப்­பட்டினத்­தில் மிக விரை­வில் இரண்­டா­வது ராக்­கெட் ஏவு­த­ளம் (இடது: மாதிரி படம்) அமை­யும் என்று இஸ்­ரோ­வின் முன்­னாள் தலை­வர் டாக்­டர் கே.சிவன் தெரி­வித்­துள்­ளார்.படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் உள்ள குல­சே­க­ரப்­பட்­டி­னத்­தில் மிக விரை­வில் ராக்­கெட் ஏவு­த­ளம் அமைக்­கப்­பட உள்­ள­தாக இஸ்­ரோ­வின் முன்­னாள் தலை­வர் டாக்­டர் கே.சிவன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கான நிலத்தை கைய­கப்­படுத்­தும் பணி­க­ளுக்கு ஒப்­பு­தல் அளித்­துள்ள மத்­திய அர­சுக்­கும் தமி­ழக அர­சுக்­கும் அவர் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

இது­பற்றி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கே.சிவன் கூறு­கை­யில், "இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி மைய­மான இஸ்ரோ (ISRO), இந்­திய செயற் கைக் கோள்­க­ளை­­யும் மற்ற நாடு­கள் தயா­ரிக்­கும் செயற்­கைக் கோள்­க­ளை­யும் ஆந்­தி­ரா­வில் உள்ள ஸ்ரீஹ­ரி­கோட்டா ஏவு­த­ளங்­களில் இருந்து விண்­ணுக்­குச் செலுத்தி வரு­கிறது.

"விண்­வெளி ஆய்­வு­க­ளுக்­காக நாட்­டின் எதிர்­கா­லத் தேவை, செல­வி­னம், பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தி­யா­விற்கு மற்­றோர் ஏவு­த­ளம் அவ­சி­ய­மாக உள்­ளது. அதன்­படி, புதிய ராக்­கெட் ஏவு­த­ளம் விரை­வில் தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் பகு­திக்கு அரு­கி­லுள்ள குல­சே­க­ரப்­பட்­டி­னத்­தில் அமைக்­கப் பட உள்­ளது.

"இந்த ஏவு­த­ளத்­திற்­காக நிலம் கைய­கப்­ப­டுத்த மத்­திய அர­சும் தமி­ழக அர­சும் ஒப்­பு­தல் அளித்­த­தில் நான் மிக­வும் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். அங்கு மிக விரை­வில் நாட்­டின் இரண்­டா­வது ராக்­கெட் ஏவு­த­ளம் அமை­யும்," என்று கூறி­யுள்­ளார்.

தமிழ்­நாடு அரசு புதிய ஏவு­த­ளம் அமைப்­ப­தற்­காக தூத்­துக்­கு­டி­யில் 961 ஹெக்­டர் பரப்பளவு நிலத்­திற்கு அனு­மதி அளித்­துள்­ளது.

'சந்­தி­ரா­யன் 2' திட்­டம் எதிர் பார்த்­த­படி வெற்­றி­பெ­றா­மல் தோல்வி அடைந்­த­போ­தி­லும் பிர­த­மர் மோடி ஒவ்­வொரு விஞ்­ஞானி யிட­மும் ஆறு­த­லா­கப் பேசி, முயற்­சி­க­ளைக் கைவி­டா­மல் தொட­ரும்­படி பெருந்­தன்­மை­யோடு கேட்­டுக்­கொண்­டதை நினைவுகூர்ந்த அவர், 'சந்­தி­ரா­யன் 3' விரை­வில் வெற்றி ­க­ர­மாக விண்­ணில் செலுத்­தப்­படும் என்றும் தெரி­வித்­தார்.