உடல் சூடு தணிக்க மூவேளை குளியல்

உடல் சூடு தணிக்க மூவேளை குளியல்

1 mins read
12835efb-84ac-4a56-ade8-8742d8bf8596
காலை, மதியம், மாலை என மூவேளையும் குளித்து உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளும் லட்சுமி. படம்: ஊடகம் -

திருச்சி: திருச்­சி­யில் கடந்த ஒரு வார­மாக கடும் வெய்­யில் சுட்­டெ­ரித்து வரும் நிலை­யில், திருச்சி மலைக்­கோட்டை தாயு­மா­ன­வர் சுவாமி திருக்­கோ­வி­லுக்­குச் சொந்­த­மான லட்­சுமி யானை காலை, மதி­யம், மாலை என மூவே­ளை­யும் குளித்து உடல்­சூட்­டைத் தணித்து வரு­கிறது.

அத்­து­டன், தும்­பிக்கை மூலம் லட்­சுமி அற்­பு­த­மாக 'மவுத் ஆர்­கன்' வாசித்­தும் மலைக்­கோட்டை கோவி­லுக்கு வரும் பக்­தர்­களை ஈர்த்து வரு­கிறது. இந்த அழ­கைப் பல­ரும் காெணாளி எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றி வரு­கின்­ற­னர்.

மலை­ய­டி­வா­ரத்­தில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள தண்­ணீர்த் தொட்­டி­யில் 'ஷவ­ரில்' இருந்து பூப்­பூ­வாய் தண்­ணீர் சிதறி விழ, அதில் லட்­சுமி ஆனந்­தக் குளி­ய­லாடி வரு­வது பக்­தர்­க­ளைக் கவர்ந்­துள்­ளது.

தர்­பூ­சணி, திராட்சை, மாதுளை, இள­நீர், வெள்­ள­ரிக்­காயைச் சாப்­பிட்டும் அது தனது உடலை குளிர்ச்­சி­யாக வைத்துள்ளது.