சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலங்கரை விளக்கத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக வெளியான மிரட்டலைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் காமராஜர் சாலையில் 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் பத்து அடுக்குகளைக் கொண்டது.
இதை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக நேற்று முன்தினம் இரவு சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்துத் தெரியவந்ததும், கலங்கரை விளக்கத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதனால் கலங்கரை விளக்கத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.