தமிழகத்தின் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பூபதி எனும் இளையர், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையில்
கட்டிச்சென்று, புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று முன்தினம் வாங்கினார். வாங்குமிடத்தில் ரூபாய் நாணயங்களை மூட்டையில் இருந்து அவர் கொட்டியதால் அங்கு அது மலைபோல் குவிந்து கிடந்தது (படம்: தினத்தந்தி). இதைப் பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஒரு ரூபாய் நாணயங்களைச் சுற்றுவட்டார வங்கிகள், தேநீர்க் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் சேகரித்ததாகக் கூறினார் பூபதி.


