இலங்கைக்கு கடத்தல்: தீவிர கண்காணிப்பு

இலங்கைக்கு கடத்தல்: தீவிர கண்காணிப்பு

1 mins read
d786467e-a70f-4e2f-8def-c91429dc3ec7
-

சென்னை: இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் நெருக்­க­டி­யா­லும் உண­வுப் பொருள்­க­ளின் மித­மிஞ்­சிய விலை ஏற்­றத்­தா­லும் அங்­குள்ள தமிழர்கள் தமி­ழகம் நோக்கி வந்துகொண்டுள்­ள­னர். படகு மூலம் தனுஷ்­கோ­டி கடற்­கரைக்கு குடும்­பத்­து­டன் வந்த சில­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது. மேலும் பலர் அக­தி­க­ளாக தமி­ழ­கத்­திற்கு வரக்­ கூ­டும் என்­ப­தால் இந்­திய கடற்­

ப­டையின் ஹோவர் கிரா­ஃப்ட் ரோந்துப் படகு மூலம் தீவிர கண்­கா­ணிப்­பு நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு உணவு, தங்­கம், எரி­பொ­ருள்­ உள்­ளிட்­டவை கடத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்­ப­தை­யும் அதி­கா­ரி­கள்

கண்­காணித்து வருகிறார்கள்.