தமிழகத்தில் 41.5% அதிக வெளிநாட்டு முதலீடுகள்

சென்னை: கடந்த ஆண்­டின் ஏப்­ரல் முதல் டிசம்­பர் மாதங்­களில் தமி­ழ­கத்­தில் அந்­நிய நேரடி முத­லீடு 41.5 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தக­வல் வெளி­வந்­துள்­ளது.

அந்­தக் கால­கட்­டத்­தில் இந்­தி­யா­வுக்கு வந்த அந்­நிய முத­லீடு ரூ.17,696 கோடி (கிட்­டத்­தட்ட $2.4 பில்­லி­யன்).

2020ஆம் ஆண்டு இதே கால­கட்­டத்­தில் தமி­ழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட அந்­நிய நேரடி முத­லீட்­டின் மதிப்பு ரூ.12,504 கோடி (சுமார் $1.7 பில்­லி­யன்). கொரோனா கிரு­மித்­தொற்­றின் முதல் அலை கடு­மை­யாக வீசிய நேரம் அது.

2021-22 நிதி ஆண்­டின் மூன்­றா­வது காலாண்­டான அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை தமி­ழ­கத்­திற்கு வந்த வெளி­நாட்டு முத­லீட்­டின் அளவு 53 விழுக்­காடு அதி­க­ரித்து ரூ,9,332 கோடி­யாக இருந்­தது.

மத்­திய வர்த்­தக, தொழில்­துறை அமைச்­சின்கீழ் செயல்­படும் தொழில்­துறை மற்­றும் உள்­நாட்டு வர்த்­தக ஊக்­க­ம­ளிப்­புத் துறை வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் இவை.

மேலும் அதன் அறிக்­கை­யில், "இந்­திய அள­வில் செய்­யப்­பட்ட அந்­நிய நேரடி முத­லீட்­டில் தமி­ழ­கத்­திற்கு வந்த முத­லீ­டு­க­ளின் விகி­தம் 4 விழுக்­காட்­டி­லி­ருந்து 5 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

"தேசிய அள­வில் அதி­க­அ­ளவு அந்­நி­ய­ நே­ரடி முத­லீட்டை ஈர்த்த மாநி­லங்­களில் தமி­ழ­கம் 5வது இடத்­தில் இருக்­கிறது. 2021 ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான காலத்­தில் தமி­ழ­கம் ரூ.8,364 கோடி முத­லீட்டை ஈர்த்­துள்­ளது.

"அந்­நிய நேரடி முத­லீட்டை ஈர்த்த வகை­யில், மகா­ராஷ்­டிரா மாநி­லம் (26%) முத­லி­டத்­தி­லும் கர்­நா­டகா (23%), குஜ­ராத் (21%), டெல்லி (13%) அந்­நிய நேரடி முத­லீட்டை ஈர்த்­துள்­ளன. 2021ஆம் ஆண்­டின் ஏப்­ரல் முதல் டிசம்­பர் வரை­யி­லான காலத்­தில் இந்­தி­யா­வுக்கு வந்த அந்­நிய நேரடி முத­லீடு 16 விழுக்­காடு குறைந்து ரூ.3 லட்­சத்து 19ஆயி­ரத்து 976 கோடி­யாக இருந்­த­போ­தி­லும்கூட தமி­ழ­கம் நோக்கி வந்த முத­லீட்­டில் வளர்ச்சி இருந்­தது," எனக் கூறப்பட்டது.

தமி­ழ­கம் 2021ம் ஆண்­டில் 302 கோடி டாலர் அள­வுக்கு அந்­நிய நேரடி முத­லீட்டை ஈர்த்­துள்­ள­தாக மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை அமைச்சு அண்­மை­யில் மக்­க­ள­வை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.

தமி­ழ­கத்­துக்­கான வளர்ச்சி ஆலோ­ச­னைக் குழு­வில் இருக்­கும் பூஜா குல்­கர்னி கூறு­கை­யில், "தமி­ழக அரசு கட்­டு­மா­னம், நிதிச்­சேவை, வாக­னத் துறை, மின்­னணு மற்­றும் இயந்­திர உற்­பத்தி, சில்­லறை வர்த்­த­கம், தக­வல்­தொ­ழில்­நுட்ப சேவைப் பிரி­வு­களில் அதி­க­மான அந்­நிய நேரடி முத­லீட்டை ஈர்த்­துள்­ளது.

"ஆனால் கொரோனா தொற்று காலத்­தில் மற்ற எந்த மாநி­லத்­தை­யும்­விட தமி­ழ­கத்­தின் உற்­பத்­தித் துறை­தான்­அ­தி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!