செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7f7e152e-476c-412d-a0eb-bf49772e3da5
-

அமைச்சரிடம் புகார்; காணாமல் போன நாய் கிடைத்தது

சென்னை: சென்னையைச் சேர்ந்த தீபு ஜெயின் என்ற பெண் தாங்கள் பாசமாக வளர்த்த 'கோல்டன் ரெட்ரீவர்' நாயைக் காணவில்லை என்றும் கண்டுபிடித்து உதவுமாறும் டுவிட்டர் மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, அமைச்ச ரின் உத்தரவின் பேரில் காவல்துறையினரும் விலங்குநல ஆர்வலர்களும் குழு அமைத்து நாயைத் தேடி வந்தனர். இச்செய்தி பரவியதும், மயிலாடுதுறையில் இருந்து சிலர் தொடர்புகொண்டு, நாய் தங்களிடம் இருப்பதாகத் தெரி வித்தனர். பின்னர் தீபு ஜெயினிடம் நாய் ஒப்படைக்கப் பட்டது.

133 மூட்டை குட்கா பறிமுதல்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ரொக்கப் பணம் ரூ.87,000 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கார்கள், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மூவரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 1,872 கிலோ குட்கா 133 மூட்டைகளில் அடைக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

கார் மோதி 3 பக்தர்கள் மரணம்

சத்திரப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பழனி-திண்டுக்கல் சாலையில் நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரையாக நடந்து சென்ற 5 பேர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தஞ்சா வூரைச் சேர்ந்த சாமிநாதன், அவரது மகன் கமலேஷ் மற்றும் உறவினர் சேகர் ஆகிய மூவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதை அடுத்து சத்திரப் பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான காரையும் அதன் ஓட்டுநரையும் தேடிவருகின்றனர்.

ஸ்டாலின் பயணச் செலவை திமுக ஏற்கும் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை: அரசுமுறைப் பயணமாக தனி விமானத்தில் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், ஸ்டாலி னின் துபாய் பயணத்திற்கான தனி விமானத்திற்கான கட்டணச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்நிலையில், "முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்ற தனி விமானத்திற்கு ரூ.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இருவழிப் பய ணத்திற்கு ரூ. 1 கோடி வரை கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது," என தனி விமானச் சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

மாணவி சீரழிக்கப்பட்ட வழக்கில் மேற்கு வங்க ஆடவர் கைது

கோல்கத்தா: சென்னை ஐஐடியில் பயின்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தம்முடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்களும் பாடம் நடத்திய பேராசிரியர் களும் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதில் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் மாதர் சங்கத்தை மாணவி அணுகினார். அச்சங்கத்தின் நெருக்குதல் காரண மாக தனிப்படை அமைத்த காவல் துறையினர், ஞாயிறு இரவு மேற்கு வங்காளம் சென்றனர். அங்கு கிங்சோ தெப் சர்மா என்பவரை கைது செய்தனர். விரைவில் இவர் சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவார். மற்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அமித் ஷா, அதிமுகவுக்கு அழைப்பு அனுப்பிய திமுக

சென்னை: டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்புவிழாவை பிரம்மாண்ட அரசியல் நிகழ்ச்சியாக நடத்த திமுக திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் திறப்புவிழாவுக்கு பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், "திறப்பு விழாவுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இது மரியாதை நிமித்தமான அழைப்பு," என்றன. திமுகவின் இந்த அணுகு முறை தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.