சென்னை: மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தப்
போராட்டம் காரணமாக தமிழகத்தில் நேற்று பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழகத்திலுள்ள 15,335 அரசு பேருந்துகளில் நேற்றுக் காலை நிலவரப்படி 68% இயக்கப்படாமல் முடங்கிக்கிடந்தன. இந்நிலையில், இன்று 60% பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக திமுக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

