சென்னை: அண்மையில் ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பான விசாரணையில் பங்கேற்ற ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வழக்கத்திற்கு மாறாக சசிகலா குறித்து புகழ்ந்து பேசினார். இதனால் சசிகலா விரைவில் அதிமுகவில் இணைவார் என பேசப்பட்டது. இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து தலைமை அலுவலகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"எனவே, அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அதற்குப் புத்துயிர் கொடுக்க முடியாது. சசி
கலாவை கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து," என்றார் பழனிசாமி.

