சென்னை: சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீக்சித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிக்கூடத்திற்கு நேற்றுக் காலை வழக்கம்போல் வேனில் சென்ற இவர், வேனிலிருந்து இறங்கிச் சென்றபோது, தாம் மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக மீண்டும் வேன் அருகே வந்துள்ளார்.
மாணவர் வந்ததை அறியாத வேன் ஓட்டுநர் பூங்கா
வனம், வேனை பின்புறம் இயக்கியதில் மாணவர் மீது வேன் மோதியது.
இதில் படுகாயமடைந்த மாணவர் தீக்சித், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் பூங்கா
வனம், மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோரைக் கைது செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகி யோர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

