எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் முதல்வர்

எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் முதல்வர்

2 mins read
7a188759-0a86-495e-9a9c-e4d60ace3f81
-

புது­டெல்லி: கலை­ஞர் அறி­வா­லய திறப்பு விழா­வுக்­காக இன்று டெல்லி செல்­லும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அங்கு எதிர்க்­கட்­சித் தலை­வர்­களைச் சந்­தித்­துப் பேச உள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

ஏப்­ரல் முதல் தேதி­யன்று இந்­தச் சந்­திப்­பு­கள் நிக­ழும் என எதிர்­பார்க்கப்­ப­டு­கிறது.

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­தலை­யொட்டி பாஜ­க­வுக்கு எதி­ராக வலு­வான எதிர்க்­கட்­சிக் கூட்­டணியை அமைக்­கும் முயற்­சி­யில் சில தலை­வர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெலங்கானா முதல்­வர் சந்­தி­ர­சே­க­ர­ராவ் ஆகி­யோர் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள்.

இந்­நி­லை­யில், முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்ற பின்­னர் மூன்­றா­வது முறை­யாக டெல்லி செல்­கி­றார் மு.க.ஸ்டா­லின். இந்த வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி அவர் ஏப்­ரல் 1ஆம் தேதி காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை­யும் அதற்கு அடுத்­த­கட்­ட­மாக கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளின் மூத்த தலை­வர்­க­ளை­யும் அவர் சந்­திக்க உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மற்ற எதிர்க்­கட்­சித் தலை­வர்­களு­டன் அவர் ஆலோ­சனை நடத்து­வார் எனத் தெரி­கிறது.

கலை­ஞர் அறி­வா­லய திறப்பு விழா­வுக்கு வருகை தரு­மாறு சோனியா, ராகுல், மேற்கு வங்க முதல்­வர் மம்தா உள்­ளிட்­டோ­ருக்கு ஏற்­கெ­னவே அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் அறி­வா­லய திறப்பு விழா அர­சி­யல் அரங்­கில் முக்­கி­யத்­து­வம் பெறும் நிகழ்­வா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

நாடு திரும்பினார் முதல்வர்

இதற்­கி­டையே அரசு முறைப் பய­ண­மாக வெளி­நாடு சென்­றிருந்த தமி­ழக முதல்­வர் நேற்று முன்­தி­னம் இரவு தனி விமா­னம் மூலம் சென்னை திரும்­பி­னார்.

இதை­ய­டுத்து செய்­தி­யாளர்­களி­டம் பேசிய அவர், தமது பய­ணத்­தின்­போது ஆறு முக்கிய நிறு­வ­னங்­க­ளு­டன் ரூ.6,100 கோடி மதிப்­பி­லான புரிந்­து­ணர்வு ஒப்பந்­தங்­கள் போடப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டார். இதன் மூலம் 14,700 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்­றார் அவர்.

"துபாய் பய­ணம் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது. கடந்த அதி­முக ஆட்சி­யில் அனைத்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்களும் வெறும் காகிதப் பூக்­க­ளா­கவே இருந்­தன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.