தமிழக மீனவர் பிரச்சினை முடிவின்றி நீண்டு கொண்டே போவதாக உயர் நீதிமன்றம் கருத்து

தமிழக மீனவர் பிரச்சினை முடிவின்றி நீண்டு கொண்டே போவதாக உயர் நீதிமன்றம் கருத்து

2 mins read
b7bfb62a-893d-4310-b80e-675b1562c147
-

சென்னை: தமி­ழக மீன­வர்­கள் பிரச்­சினை ஒரு முடி­வில்­லா­மல் நீண்டு கொண்டே போவ­தாக சென்னை உயர் நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

மீன­வர்­க­ளின் பிரச்­சி­னைக்கு மத்­திய, மாநில அர­சு­கள் விரை­வில் நிரந்­தர தீர்வு காண வேண்­டும் என நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­கள் 68 பேரை விடு­விக்க மத்­திய அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அகில இந்திய மீன­வர் காங்­கி­ரஸ் அமைப்பின் தேசிய துணைத்­த­லை­வர் ஆம்ஸ்ட்­ராங் பெர்­னாண்டோ வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக அவர் உயர் நீதி­மன்­றத்­தை­யும் அணுகி உள்­ளார். இந்த வழக்கு தலைமை நீதி­பதி தலை­மை­யி­லான அமர்­வின் முன்பு நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது தமி­ழக மீன­வர்­கள் எதற்­காக எல்லை தாண்டி செல்ல வேண்­டும்? என நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

"இந்த விவ­கா­ரம் தொடர்­பாக இலங்கை நீதி­மன்­றத்­தை­தான் அணுக வேண்­டும். அன்­னிய நாட்டுக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட முடி­யாது. தமி­ழக மீன­வர்­க­ளின் கைதுக்கு அனு­தா­பம் மட்­டுமே தெரி­விக்க முடி­யும்.

"இந்­திய அர­சின் வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­கள்­தான் தமிழக மீன­வர்­களை விடு­விக்க தகுந்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்," என நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, எல்லை தாண்டி மீன் பிடித்த குற்­றச்­சாட்­டின் பேரில் ராமே­சு­வ­ரம் மீன­வர்­கள் 4 பேரை இலங்கை கடற்­படை கைது செய்தது.

இலங்கை கடற்­ப­டை­யால் ஏற்கெனவே கைது செய்­யப்­பட்ட ராமே­சு­வ­ரம், மண்­ட­பம் பகுதி மீன­வர்­கள் 16 பேரை விடு­தலை செய்ய வலி­யுறுத்தி கடந்த சில நாள்­களாக ராமே­சு­வ­ரத்­தில் போராட்­டம் நடை­பெற்­றது. அதன் பின்­னர் ஐந்­நூற்­றுக்­கும் மேற்­பட்ட பட­கு­களில் நேற்று முன்­தி­னம் காலை மீண்­டும் மீன்­பி­டிக்க கட­லுக்­குச் சென்­ற­னர்.

இந்த நிலை­யில் நான்கு மீன­வர்­களை கைது செய்த இலங்கை கடற்­ப­டை­யி­னர், அவர்­க­ளது விசைப்­ப­ட­கை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். இதனால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.