ஆறு நிறுவனங்கள்; ரூ.6,100 கோடி முதலீடு

ஆறு நிறுவனங்கள்; ரூ.6,100 கோடி முதலீடு

2 mins read
8dbcc2ce-8d20-4f9a-907e-96558907184a
-

சென்னை: துபாய், அபு­தாபி பய­ணம் ஆக்­கபூர்வமாக அமைந்­தது என்­றும் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

திரு ஸ்டா­லின் முதல்வராக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்­துக்கொண்டு செவ்­வாய்க்கிழமை சென்னை திரும்­பி­னார். விமான நிலை­யத்­தில் அவரை நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் வர­வேற்­ற­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் மு.க.ஸ்டா­லின் பேசி­னார்.

"என்­னு­டைய பய­ணம் வெற்­றி­ க­ர­மாக, மகிழ்ச்­சி­க­ர­மாக அமைந்­தது. ஆறு முக்­கிய தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டுள்­ளன. இரும்புத் தள­வா­டங்­கள் துறை­யைச் சேர்ந்த 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறு­வ­னத்­தோடு ரூ.1,000 கோடி மதிப்­பி­லான ஒப்­பந்­தம் போடப்­­பட்­டுள்­ளது.

"ஜவு­ளித்­து­றை­யைச் சார்ந்த 'ஒயிட் அவுஸ்' நிறு­வ­னத்­து­டன் ரூ.500 கோடிக்கு ஒப்­பந்­தம் போடப்­பட்­டுள்­ளது. உண­வுத்­து­றை­யைச் சேர்ந்த 'டிரான்ஸ் வேர்ல்ட்' குழுமத்­ தோடு ரூ.100 கோடி மதிப்­பில் ஒப்­பந்­த­மும் மருத்­துவ துறை­யைச் சார்ந்த 'அஸ்­டர் டி.எம். ஹெல்த் கேர்' நிறு­வ­னத்­தோடு ரூ.500 கோடி மதிப்­பில் ஒப்­பந்­த­மும் போடப்பட்டு உள்­ளது. சரக்­குப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 'ஷரப்' நிறு­ வ­னத்­து­டன் ரூ.500 கோடி மதிப்­பில் ஒப்­பந்­தம் போடப்­பட்­டி­ருக்­கிறது. உணவு பதப்­ப­டுத்­தும் தொழில் மற்றும் கட்­டு­மா­னத்­து­றை­யைச் சார்ந்த 'லுலு' நிறு­வ­னத்­தோடு ரூ.3,500 கோடி மதிப்­பில் ஒப்­பந்­தம் போடப்­பட்­டுள்­ளது.

"இந்த ஆறு நிறு­வ­னங்­க­ளு­டன் ரூ.6,100 கோடி மதிப்­புள்ள ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்­டுள்­ளன," என்று மு.க. ஸ்டா­லின் அறி­வித்­தார்.

இவற்றின் மூல­மாக 14,700 பேருக்கு வேலை­வாய்ப்பு உரு­வா­கும் என்­று அவர் சொன்னார்.

துபாய், அபு­தா­பி­யில் முக்­கிய துறை­க­ளைச் சேர்ந்த அமைச்­சர் ­க­ளை­யும் அரசு அதி­கா­ரி­க­ளை­யும் பெரிய தொழில் நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­க­ளை­யும் சந்­தித்­த­தாக அவர் கூறி­னார்.

"பெரிய நிதி மேலாண்மை நிறு­வ­னங்­கள் பல தமி­ழ­கத்­தில் புதுப்­பிக்­கத்­தக்க மின் உற்­பத்தித் திட்­டங்­கள், சிறு துறை­மு­கங்­கள் மேம்­பாடு, உணவு பதப்­ப­டுத்­து­தல், தொழில் பூங்­காக்­கள் உரு­வாக்­கக்­கூ­டிய திட்­டங்­களில் முத­லீடு செய்­திட முன்­வந்­துள்­ளன.

"தமி­ழ­கத்­தில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இருப்­பதை நான் தெளி­வாக எடுத்­துச்­சொல்லி இருக்­கி­றேன். தமிழ்­நாட்டில் நில­வக்­கூ­டிய, தொழில் தொடங்க உத­வக்­கூ­டிய சாத­க­மான சூழ்­நிலை அமைந்­தி­ருப்­பதை எல்­லோ­ரும் அங்கே என்னை பாராட்­டி­னார்­கள். தமி­ழ­கத்­தை­யும் ஒட்­டு­மொத்­த­மாக பாராட்­டினார்கள்," என்றார் முதல்வர்.

துபாய், அபு­தாபி வாழ் தமி­ழர் ­க­ளுக்கு அவர் நன்­றி­யும் தெரி­வித்­துக்கொண்­டார்.

"அவர்­கள் தந்த எழுச்­சி­மிகு வர­வேற்பு, தமிழ்­நாடு போன்ற உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது," என்று முதல்­வர் குறிப்பிட்டார்.