சென்னை: அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்த பிறகும் இலாகா மாற்றம்தான் நீங்கள் வழங்கும் அதிகபட்ச தண்டனையா என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும் அத்துறையில் இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் "அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் அதிகபட்ச தண்டனையா?
"ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுப்பதற்கு துணிவு இல்லாத நீங்கள் எப்படி சமூக நீதியை காப்பீர்கள்," என்று தமது டுவிட்டர் பதிவில் அதிமுக கேள்வி எழுப்பியது.

