ரூ.40 லட்சம் லஞ்சம் பறிமுதல்; துணை ஆட்சியரிடம் விசாரணை

ரூ.40 லட்சம் லஞ்சம் பறிமுதல்; துணை ஆட்சியரிடம் விசாரணை

1 mins read
103a843f-7cd3-4b82-a1d2-7f54a5bf60d9
அண்­மை­யில், சென்­னை­யில் போக்­கு­வ­ரத்­துத் துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் லஞ்­சப் பணம் கைப்­பற்­றப்­பட்ட நிலை­யில், தற்­போது தலைகுனிந்து அமர்ந்துள்ள சரவணகுமார் என்ற அதி­கா­ரி­யிடமும் லஞ்­சப் பணத்தைப் பறிமு­தல் செய்துள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

திருச்சி: திருச்­சி­யில் இருந்து ரூ.40 லட்­சம் லஞ்­சப் பணத்­து­டன் சென்னை சென்­று­கொண்­டி­ருந்த ஆதி­தி­ரா­வி­டர் நலத்­துறை துணை ஆட்­சி­யரை விழுப்­பு­ரத்­தில் மடக்­கிய லஞ்ச ஒழிப்­புக் காவலர்கள் அவ­ரி­டம் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

திருச்சி மாவட்ட ஆதி­தி­ரா­விடர் நலத்­துறை துணை ஆட்­சி­யரா­கப் பணி­யாற்றி வரு­ப­வர் சர­வ­ண­குமார். அந்­தத் துறை­யில் காலி­யாக உள்ள சமை­ய­லர் உள்­ளிட்ட பல்­வேறு பணி­களில் ஊழி­யர்­களை நிரப்ப இவர் லஞ்­சம் வசூ­லித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வசூல் செய்த பணத்­து­டன் சர­வ­ணகுமார் காரில் சென்னை ெசல்­வ­தாக கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில், திருச்சி லஞ்ச ஒழிப்பு காவ­லர்­கள், அவரை பின்­தொ­டர்ந்து விரட்டி வந்­துள்­ள­னர்.

ஆனால், அவர்­க­ளால் சர­வ­ண­கு­மார் வந்த வாக­னத்தை மடக்­க­மு­டி­யாத நிலை­யில், இது­கு­றித்து விழுப்­பு­ரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவ­லர்­க­ளுக்­குத் தக­வல் அளித்­த­னர்.

இதை­ய­டுத்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்­சா­லை­யில், கெடி­லம் என்ற இடத்­தில் சர­வ­ண­கு­மார் வந்த வாக­னத்தை மடக்­கிய போலி­சார், அந்த வாக­னத்­தில் கட்­டுக்­கட்­டாக ரூ.500 பணக்­கட்­டு­கள் இருந்­த­தைக் கண்டு அசிர்ச்சி அடைந்­த­னர். கணக்கிட்டுப் பார்த்ததில் ரூ.40 லட்­சம் பணம் இருந்­தது தெரி­ய­வந்­தது.

முத­லில் பணம் குறித்து தனக்கு எது­வுமே தெரி­யாது என்று மறுத்து­விட்ட சர­வ­ண­கு­மார், தொடர் விசா­ர­ணை­யில் லஞ்­சம் குறித்து ஒப்­புக்­கொண்­ட­தா­கத் தெரியவந்­துள்­ளது.

வசூ­லித்த பணத்தை சென்­னை­யில் உள்ள மேல­தி­கா­ரிக்கு கொண்டு­சென்­ற­தாக அவர் வாக்கு­மூ­லம் அளித்த நிலை­யில், விசா­ர­ணை­யைக் காவல்துறையினர் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ள­னர்.